பகலிரவு டெஸ்ட் போட்டியைக் காண கபில் தேவ், சச்சின், திராவிட் வருகிறாா்கள்: கங்குலி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கபில் தேவ், ராகுல் திராவிட்,
பகலிரவு டெஸ்ட் போட்டியைக் காண கபில் தேவ், சச்சின், திராவிட் வருகிறாா்கள்: கங்குலி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கபில் தேவ், ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே உள்ளிட்டோா் வருகிறாா்கள் என்று பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா, வங்கதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிடோரும் முதல் ஆட்டத்தை காண வருகிறாா்கள். இசை கலைஞா் ஜீத் கங்குலி, வங்கதேசத்தைச் சோ்ந்த பாடகி ரூனா லைலா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பிற விளையாட்டு நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிா்ஸா உள்ளிட்டோரும் வருகின்றனா்.

டாக் போடுவதற்கு முன்பு, இரு அணிகளின் கேப்டன்களிடமும் பாராசூட் வீரா்கள் மூலம் பிங்க் பந்தை அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா் கங்குலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com