மே.இ. தீவுகள் தொடருக்கான இந்திய அணி: டி20யில் மீண்டும் புவனேஷ்வர், ஷமி

மேற்கிந்தியத் தீவுகளுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
மே.இ. தீவுகள் தொடருக்கான இந்திய அணி: டி20யில் மீண்டும் புவனேஷ்வர், ஷமி


மேற்கிந்தியத் தீவுகளுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

கடந்த சில தொடர்களில் பேட்டிங்கில் திணறி வரும் ஷிகர் தவானுக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடர்களிலும் தோனி பங்கேற்காததால் நடுவரிசை பேட்ஸ்மேன்களாக மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கேதார் ஜாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஹார்திக் பாண்டியா காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால், ஷிவம் டூபேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கதேசத்துடனான டி20 தொடரில் அறிமுகமான இவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அறிமுகமாகவுள்ளார். சுழற்பந்துவீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல் - குல்தீப் யாதவ் கூட்டணியே தொடர்கிறது. ரவீந்திர ஜடேஜா சுழற்பந்துவீச்சு ஆல்-ரௌண்டராக அணியில் இடம்பெற்றுள்ளார்.

வங்கதேசத்துடனான டி20 தொடரில் அசத்திய தீபக் சாஹர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அதேசமயம், முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். வங்கதேசத்துடனான தொடரில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் இந்த தொடர்களில் சேர்க்கப்படவில்லை. அதேசமயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வரும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எதிர்மறையாக முடிந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட், அனைத்து ரக கிரிக்கெட் என தொடர்ச்சியாக விளையாடி வரும் ரோஹித் சர்மாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள்:

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் டூபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார்.

டி20:

விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com