தாயை இழந்த 10 நாள்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கியுள்ள 16 வயது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்!

தாயை இழந்த 10 நாள்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கியுள்ள 16 வயது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்!

தாய் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட நேரில் செல்ல முடியாத நிலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்று அறிமுகமாகியுள்ளார்

16 வருடம் 279 நாள்கள். இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகியுள்ள பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா-வின் வயது இது.

3 டி-20 ஆட்டங்கள் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. இந்நிலையில், இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடா் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியுள்ளது. கேப்டன் டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், அஸாா் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

நசீம் ஷாவின் தாய் 10 நாள்களுக்கு முன்பு காலமானாா். இருப்பினும், மனதளவில் அவா் திடமாக இருக்கிறாா் என்கிற நம்பிக்கையுடன் அவரைத் தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. தாய் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட நேரில் செல்ல முடியாத நிலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்று அறிமுகமாகியுள்ளார் நசீம் ஷா. தாய் இறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் தர பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். சோகம் காரணமாக முதல் இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை.  2-வது இன்னிங்ஸில் வீசிய 8 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் எடுத்துக் கவனம் ஈர்த்தார். இந்த இளம் புயல் சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எண்ண வைத்தார். 

நசீம் ஷா இதுவரை ஏழு முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். இன்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானது மூலம் ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com