ஆஸ்திரேலியா 312/1: பொறுப்பாக விளையாடி சதமடுத்த வார்னர்! நொந்து போன பாகிஸ்தான்!

பேட்டிங்கில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் பந்துவீச்சாளர்கள் அசத்துவார்கள் என எதிர்பார்த்த பாகிஸ்தான் அணிக்கு இன்று ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா 312/1: பொறுப்பாக விளையாடி சதமடுத்த வார்னர்! நொந்து போன பாகிஸ்தான்!

பேட்டிங்கில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் பந்துவீச்சாளர்கள் அசத்துவார்கள் என எதிர்பார்த்த பாகிஸ்தான் அணிக்கு இன்று ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் பந்துவீச்சில் தங்களது குறைகளைச் சரிசெய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு வீணானது. அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு 2-வது நாளிலேயே அதிர்ச்சியளித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

தொடக்க வீரர்களான வார்னரும் பர்ன்ஸும் 61 ஓவர்கள் வரை விளையாடி ஸ்கோரை 222 ரன்களுக்கு உயர்த்தினார்கள். இன்று விக்கெட்டே விழாதா என நொந்துபோன பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆறுதல் அளித்தார் பர்ன்ஸ். அவர் 97 ரன்களில் யாஷிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 78 பந்துகளில் அரை சதமெடுத்த வார்னர், பிறகு சற்று நிதானமாக விளையாடி 180 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஷஸ் தொடரில் சரியாக விளையாடாததால் இன்று தன் திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. 257 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். நாள் முழுக்க விளையாடியும் இன்று அவர் பத்து பவுண்டரிகள் மட்டுமே எடுத்தார். ஒரு சிக்ஸரும் இல்லை.

2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 87 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 72 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வார்னர் 151, லபுசானே 55 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்த டெஸ்டை ஆஸ்திரேலியா தான் வெல்லும் என்கிற நிலைமை தற்போது உள்ளது. என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com