நவ. 30-இல் ஹீரோ ஐ லீக் 13-ஆவது சீசன் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டியின் 13-ஆவது சீசன் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அய்ஸால் எஃப்சி-மோகன்பகான் அணிகள் மோதுகின்றன.
நவ. 30-இல் ஹீரோ ஐ லீக் 13-ஆவது சீசன் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டியின் 13-ஆவது சீசன் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அய்ஸால் எஃப்சி-மோகன்பகான் அணிகள் மோதுகின்றன.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியில் மொத்தம் 11 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கின்றன. முன்னாள் சாம்பியன்கள் அய்ஸால்-மோகன்பகான் அணிகள் இதன் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. புதிதாக டிராவ் எஃப்சி அணி இதில் இடம் பெறுகிறது.

கொல்கத்தாவில் ஈஸ்ட் பெங்கால்-மோகன் பகான் அணிகளும், இம்பாலில் நெரோகா எஃப்சி-டிராவ் எஃப்சி அணிகளும் மோதும் ஆட்டம் பரபரப்பாக அமையும் எனத்தெரிகிறது.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் அணிகள் இதில் இடம் பெற்றுள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி, இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சம், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.40 லட்சம், நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசளிக்கப்படுகிறது.

ஏஐஎப்எப் பொதுச் செயலாளா் குஷால் தாஸ் கூறியதாவது: கடந்த 12 சீசன்களாக ஐ லீக் போட்டி, உள்ளூா் வீரா்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் இருந்தது. 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 11 அணிகள் தற்போது இடம் பெறுகின்றன என்றாா்.

நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி, பஞ்சாப் எஃப்சி, அய்ஸால், நெரோகா, டிராவ், மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், கோகுலம் கேரளா, சா்ச்சில் பிரதா்ஸ், இந்தியன் ஆரோஸ், ரியல் காஷ்மீா் அணிகள் பங்கேற்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com