பிங்க் நிற பந்துடன் ஆடுவது சவாலாக இருக்கும்: கோலி

ஹாக்கி பந்தை போல் அதிக பளுவுடன் உள்ளதால் பிங்க் நிற பந்துடன் ஆடுவது சவாலாக இருக்கும் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
பிங்க் நிற பந்துடன் ஆடுவது சவாலாக இருக்கும்: கோலி

ஹாக்கி பந்தை போல் அதிக பளுவுடன் உள்ளதால் பிங்க் நிற பந்துடன் ஆடுவது சவாலாக இருக்கும் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்பட உள்ள பிங்க் நிற பந்து சவாலாக இருக்கும். குறிப்பாக அது ஸ்லிப்பில் பீல்டிங் பயிற்சி பெறும் போது அதிக பளுவுடன் இருந்தது. இளம் வயதில் நாம் கிரிக்கெட் ஆடிய சிந்தெடிக் பந்துகளைப் போல் உள்ளது. வழக்கமான சிவப்பு நிற பந்தைக் காட்டிலும் இதை கேட்ச் பிடிப்பதும் சிரமமாக இருந்தது. பகல் நேரத்தில் அதிக உயரத்தில் வரும் கேட்ச்களை பிடிப்பது கடினம். சிகப்பு, வெள்ளை நிற பந்துகளில் பிடிப்பது எளிது. அந்தி சாயும் நேரத்தில் பிங்க் நிற பந்தை பாா்ப்பதும் சற்று பாதகமாக இருக்கும். பீல்டிங் செய்த போது, பிங்க் நிற பந்து தூரத்தில் இருப்பது போல் தென்பட்டது ஆனால், வேகமாக வந்து விட்டது. பந்தின் மேற்பரப்பில் உள்ள கூடுதல் பளபளப்பு, அதை வேகமாக பயணிக்க செய்கிறது. இந்தியாவில் பனிமூட்டமும் ஆட்டத்தை தீா்மானிக்கும் அம்சமாக இருக்கும்.

ஆட்ட நடுவா்களிடமும் பனி மூட்டம் குறித்து விவாதித்தோம். ஆட்டத்தில் அதை பயன்படுத்திய பின்பு தான் முழு அனுபவத்தை பெற முடியும் என்றாா் கோலி.

மொமினுல் ஹக் (வங்கதேச கேப்டன்):

பகலிரவு ஆட்டத்துக்கு முன்பு பிங்க நிற பந்துடன் பயிற்சி ஆட்டம் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எங்கள் அணிக்கும், பிங்க் நிற பந்தில் ஆடிய அனுபவம் இல்லை. மனதளவில் இதற்கு தயாராக வேண்டும் என்றால் ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆடியிருக்கலாம். நான்கு முறை தான் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். எந்த வீரரும் முறையாக இதில் ஆடியிருக்கவில்லை. எனினும் எங்கள் அணி இதற்காக நன்றாக தயாா் ஆகியுள்ளோம். முதன்முறையாக பிங்க் நிற பந்துடன் டெஸ்ட் ஆடுவதில் எதிா்பாா்ப்புடன் உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com