இன்னும் ஒரு ஆண்டு உள்ளது.. அதற்குள் கோலியை சீண்டும் ஆஸி., கேப்டன்!

இன்னும் ஒரு ஆண்டு உள்ளது.. அதற்குள் கோலியை சீண்டும் ஆஸி., கேப்டன்!

ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தற்போதே விராட் கோலியை சீண்டியுள்ளார்.


ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தற்போதே விராட் கோலியை சீண்டியுள்ளார்.

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெற்றி பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டிம் பெயின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை பிரிஸ்பேனில் தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த டிம் பெயின் இந்தியக் கேப்டன் விராட் கோலியை சீண்டும் வகையில் பேசினார்.

அவர் தெரிவிக்கையில்,

"நாங்கள் நிச்சயம் முயற்சி செய்வோம். அதை விராட் கோலியின் அனுமதியுடன் நடத்த வேண்டும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து எங்களுக்குப் பதில் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களை நாங்கள் பொதுவாக பிரிஸ்பேனில்தான் தொடங்குவோம். கடந்தாண்டைத் தவிர இதுவரை அப்படிதான் நடைபெற்று வருகிறது. 

நான் கூறியதுபோல் விராட் கோலியிடம் இதற்கு அனுமதி கோரப்படும். பிரிஸ்பேனில் விளையாட அனுமதி கிடைத்தால் பார்க்கலாம். முடிந்தால் அவர் நல்ல மனநிலையில் இருந்தால் பிங்க் நிற பந்து டெஸ்ட் ஆட்டமும் கிடைக்கலாம். அதனால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர்களை பொதுவாக பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்குவது வழக்கமாகும். ஆனால், கடந்தாண்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாரம்பரிய மைதானங்களான மெல்போர்ன், சிட்னி, அடிலெய்ட் மற்றும் பெர்த் ஆகிய மைதானங்களில்தான் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதேசமயம், அடிலெய்ட்டில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை விளையாடவும் இந்தியா மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com