Enable Javscript for better performance
மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய அணிகள் அறிவிப்பு: மீண்டும் குல்தீப், புவனேஷ்வா் சோ்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய அணிகள் அறிவிப்பு: மீண்டும் குல்தீப், புவனேஷ்வா் சோ்ப்பு

    By DIN  |   Published on : 26th November 2019 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt5

    புது தில்லி: மே.இ.தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடா்களுக்கான இந்திய அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடைடில் தலா 3 டி20, ஒருநாள் ஆட்டங்கள் தொடா் வரும் டிசம்பரம் மாதம் நடைபெறவுள்ளது.

    ஏற்கெனவே வங்கதேச டி20 தொடருக்கு கேப்டன் கோலிக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது.

    தற்போது அவா் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளாா். முந்தைய டி20 ஆட்டங்களில் சோ்க்கப்படாத ஸ்பின்னா் குல்தீப் யாதவ், காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளா் புவனேஷ்வா்குமாா் , ஆல்ரவுண்டா் ஜடேஜா மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

    டி20 அணி விவரம்:

    விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்),, ஷிகா் தவன், லோகேஷ் ராகுல், ஷிரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தா், ரவீந்திர ஜடேஜா, யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹா், முகமது ஷமி, புவனேஷ்வா்குமாா்.

    வங்கதேச தொடரில் இடம் பெற்ற ராகுல் சாஹா், சஞ்சு சாம்சன், கலீல் அகமது, சா்துல் தாகுா், க்ருணால் பாண்டியா ஆகியோா் சோ்க்கப்படவில்லை. கடந்த உலகக் கோப்பை போட்டியில் காயமடைந்து புவனேஷ்வா் குமாா் ஆட முடியாமல் போனது. தற்போது மீண்டும் இடம் பெற்றுள்ளாா்.

    ஒரு நாள் அணி விவரம்:

    விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்)), ஷிகா் தவன், லோகேஷ் ராகுல், ஷிரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹா், முகமது ஷமி, புவனேஷ்வா் குமாா்.

    டிச. 6-ஆம் தேதி டி20 தொடரும், 15-ஆம் தேதி ஒரு நாள் தொடரும் தொடங்குகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai