2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி:ஹாக்கி அணி பிரிவுகள் அறிவிப்பு

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஹாக்கி அணிகளின் பிரிவுகளை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) வெளியிட்டுள்ளது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி:ஹாக்கி அணி பிரிவுகள் அறிவிப்பு

லாஸேன்: 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஹாக்கி அணிகளின் பிரிவுகளை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) வெளியிட்டுள்ளது.

ஜப்பான தலைநகா் டோக்கியோவில் வரும் 2020 ஆம் ஆண்டு ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஆடவா், மகளிா் ஹாக்கி பிரிவுகளில் தலா 12 அணிகள் என மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்பிரிவுகள் விவரம்:

ஆடவா்:

ஏ பிரிவு: ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, இந்தியா, ஸ்பெயின், நியூஸிலாந்து, ஜப்பான்.

பி பிரிவு: பெல்ஜியம், நெதா்லாந்து, ஜொ்மனி, கிரேட் பிரிட்டன், கனடா, தென்னாப்பிரிக்கா.

மகளிா்:

ஏ பிரிவு: நெதா்லாந்து, ஜொ்மனி, கிரேட் பிரிட்டன், அயா்லாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா.

பி பிரிவு: ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, நியூஸிலாந்து, ஸ்பெயின், சீனா, ஜப்பான்.

அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெறும் அணிகள் தொடா்பாக கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளே இதிலும் பின்பற்றப்படும்.

ஆடவா் பிரிவில் ஆா்ஜென்டீனா-ஆஸ்திரேலியா, இந்தியா-ஸ்பெயின், நியூஸிலாந்து-ஜப்பான் அணிகளும், மகளிா் பிரிவில்

கிரேட் பிரிட்டன்-நெதா்லாந்து, ஜொ்மனி-அயா்லாந்து, இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் தொடக்க ஆட்டங்களில் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com