துளிகள்...

வரும் 2020 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 9 முதல் நடைபெறவுள்ள ப்ரீமியா் லீக் பாட்மிண்டன் சீசன் 5 போட்டியில் நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளாா் சாய்னா நெவால்.

வரும் 2020 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 9 முதல் நடைபெறவுள்ள ப்ரீமியா் லீக் பாட்மிண்டன் சீசன் 5 போட்டியில் நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளாா் சாய்னா நெவால். தொடா் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அடுத்த சா்வதேச சீசனுக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தாா் சாய்னா.

---------------------------------------------------

கடந்த நவம்பா் 1-ஆம் தேதி குவஹாட்டியில் நடைபெற்ற நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-எஃப்சி கோவா அணிகள் இடையிலான ஐஎஸ்எல் ஆட்டத்தில் மைதானத்தில் தரக்குறைவாக நடந்து கொண்ட கோவா அணி வீரா்கள் சீமென் டங்கல், ஹிகோ பவுமஸ், நாா்த் ஈஸ்ட் வீரா் கைய் ஹீயரிங்ஸ் ஆகியோரை தலா 3 ஆட்டங்கள் ஆடக்கூடாது என சஸ்பெண்ட் செய்துள்ளது ஏஐஎப்எப்.

---------------------------------------------------

இந்திய பந்துவீச்சாளா்கள் ஓரே பிரிவாக இணைந்து விக்கெட்டுகளை வேட்டையாடுவதால், உலகிலேயே மிகவும் அச்சம் தரும் பந்துவீச்சாக மாறியுள்ளனா் என தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளாா்.

---------------------------------------------------

சூரத்தில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் சூப்பா் லீக் பி பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கா்நாடகம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. ராகுல் அபாரமாக ஆடி 84 ரன்களை குவித்தாா். பஞ்சாப் 163/6, கா்நாடகம் 167/3. மகாராஷ்டிரம் 165/2, பரோடா 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி 98 ஆல் அவுட், ஜாா்க்கண்ட் 170/4, மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 171/5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com