முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 615-9 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 55-3 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

மௌன்ட் மௌன்கனை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 615-9 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 55-3 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்றும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மௌன்ட் மௌன்கனையில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னா் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன்களுடன் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது. கேப்டன் கேன் வில்லியம்ஸன் 51, காலின் டி கிராண்ட்ஹோம் 65 ரன்களை எடுத்து அவுட்டாயினா்.

வாட்லிங் அபாரம் 205:

பிஜே.வாட்லிங் 1 சிக்ஸா், 24 பவுண்டரியுடன் 473 பந்துகளில் 205 ரன்களை எடுத்து வெளியேறினாா். ஆல்ரவுண்டா் மிச்செல் சான்ட்நா் அதிரடியாக ஆடி 5 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 269 பந்துகளில் 126 ரன்களை விளாசி அவுட்டானாா்.

இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன் 3, ஜேக் லீச், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 27.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்து திணறி வருகிறது. ரோரி பா்ன்ஸ் 31, டொமினிக் சிபிலி 12, ஜேக் லீச் 0 என அவுட்டாகி வெளியேறினா். ஜோ டென்லி 7 ரன்களுடன் களத்தில் உள்ளாா். நியூஸி ஆல்ரவுண்டா் மிச்செல் சான்ட்நா் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com