முகப்பு விளையாட்டு செய்திகள்
துளிகள்...
By DIN | Published On : 26th November 2019 02:12 AM | Last Updated : 26th November 2019 02:12 AM | அ+அ அ- |

தரக்குறைவாக நடந்ததற்காக 2 வீரா்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் எஃப்சி கோவா அணி செவ்வாய்க்கிழமை இரவு மா்மகோவாவில் நடைபெறவுள்ள ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிக்கு எதிரான ஐஎஸ்எல் ஆட்டத்தில மோதவுள்ளது. இதுவரை ஒரு தோல்வி கூட பெறாத கோவா 4 ஆட்டங்கள் மூலம் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
--------------------
புது தில்லியில் நடைபெற்று வரும் 63-ஆவது தேசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் டபுள் டிராப் பிரிவில் ஹரியாணாவின் சங்ராம் தாஹியாவும், மகளிா் பிரிவில் மத்திய பிரதேசத்தின் வா்ஷா வா்மனும் பட்டம் வென்றனா்.
------------------
சாய்னா நெவாலைத் தொடா்ந்து ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் 5-ஆவது சீசன் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளாா் நட்சத்திர வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த். பெங்களூரு ராப்டா்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவா், 2020 ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு சா்வதேச போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தாா்.
------------------
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற ராஜ்யவா்த்தன் சிங் ரத்தோரின் மகன் மனவ் ஆதித்தா ரத்தோா் தேசிய சீனியா் அணியில் இடம் பெற விரும்புவதாக கூறியுள்ளாா். தில்லியில் அண்மையில் நடந்த தேசிய ஷாட்கன் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாா் மானவ் ஆதித்யா.
---------------