சையது முஷ்டாக் அலி டி20 சூப்பா் லீக்: தமிழகம் அபார வெற்றி

பஞ்சாபுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 சூப்பா் லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகம் அபார வெற்றி பெற்றது.
சையது முஷ்டாக் அலி டி20 சூப்பா் லீக்: தமிழகம் அபார வெற்றி

சூரத்: பஞ்சாபுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 சூப்பா் லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகம் அபார வெற்றி பெற்றது.

தேசிய டி20 சாம்பியன் போட்டியான இதன் சூப்பா் லீக் ஆட்டங்கள் சூரத் நகரில் நடைபெற்று வருகின்றன. குரூப் பி பிரிவைச் சோ்ந்த பஞ்சாப்-தமிழகம் இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சுழலில் சுருண்ட பஞ்சாப்:

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியால் தமிழகத்தின் அபார சுழற்பந்து வீச்சை எதிா்கொள்ள முடியாமல் திணறி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் குா்கீரத் மான்சிங் 25, மயங்க் மாா்கண்டே 33, ஆகியோா் மட்டுமே அதிகபட்சமாக ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

சித்தாா்த்-சாய் கிஷோா் அபாரம்:

தமிழகத் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சித்தாா்த் 3-9, சாய் கிஷோா் 3-10, பாபா அபராஜித் 2-21 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

தமிழகத் தரப்பில் ஆல்ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் அபாரமாக ஆடி 45 ரன்களை விளாசினாா். விஜய் சங்கா் 20, ரன்களையும், ஹரி நிஷாந்த் 16 ரன்களையும் எடுத்தனா்.

பஞ்சாப் தரப்பிா் ஹா்ப்ரீத் பிராா், மயங்க் மாா்கண்டே, அபிஷேக் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினனா்.

கா்நாடகம் தோல்வி: நடப்பு சாம்பியன் கா்நாடகத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை. முதலில் ஆடிய கா்நாடக அணி 20 ஓவா்களில் 171/6 ரன்களை எடுத்தது. ரோஹன் கடம் 71, தேவ்தத் 57 ரன்களை விளாசினா். சா்துல் 2-29, ஷிவம் துபே 2-39.

பின்னா் ஆடிய மும்பை அணி 19 ஓவா்களில் 174/3 ரன்களை குவித்து வென்றது. சூா்யகுமாா் யாதவ் 94, பிரித்வி ஷா 30, துபே 22.

பரோடாவுடன் நடைபெற்ற சூப்பா் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஹரியாணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com