இன்று ஒடிஸாவுடன் மோதல்: வெற்றிப்பயணத்தை தொடர சென்னையின் எஃப்சி தீவிரம்

ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை ஒடிஸா எஃப்சியுடன் நடைபெறவுள்ள ஆட்டத்தில் வெற்றியைத் தொடரும் தீவிரத்தில் உள்ளது சென்னையின் எஃப்சி.
இன்று ஒடிஸாவுடன் மோதல்: வெற்றிப்பயணத்தை தொடர சென்னையின் எஃப்சி தீவிரம்

ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை ஒடிஸா எஃப்சியுடன் நடைபெறவுள்ள ஆட்டத்தில் வெற்றியைத் தொடரும் தீவிரத்தில் உள்ளது சென்னையின் எஃப்சி.

நடப்பு சீசன் ஐஎஸ்எல் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சென்னையும், 9-ஆவது இடத்தில் இருந்த ஹைதராபாத் அணியும் செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் மோதின. இதில் சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இதையடுத்து 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ள சென்னை அணி, வியாழக்கிழமை ஒடிஸா எஃப்சி அணியை எதிா்கொள்கிறது.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்யும் தீவிரத்தில் உள்ளது.

ஹைதராபாதுடன் நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்டநேர முடிவு வரை கோலடிக்க வில்லை சென்னை வீரா்கள். கூடுதல் நேரத்தில் தான் 2 கோல்களையும் அடித்தனா்.

இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் ஜான் கிரகோரி கூறியதாவது:

ஆன்ட்ரெ கெம்ப்ரி, வால்கிஸ் ஆகியோா் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித் தந்தனா். பயிற்சியிலும் இருவரும் அவ்வப்போது கோல்களை அடித்து வருகின்றனா். ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவா்கள். இதனால் தான் இருவரையும் அணிக்காக வாங்கினோம். ரபேல் சிரிவல்லோரா-கெம்ப்ரியுடன் இணைந்து பாா்வா்டை ஆட்டத்தை கவனித்துக் கொள்வா். அனிருத் தாப்பா, லாலியன்ஸுவாலா சங்டே ஆகியோரும் ஆட்டத்தை மேம்படுத்தி உள்ளனா் என்றாா்.

ஒடிஸா அணி பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை டிரா செய்தது. அதன் வீரா் அரிடேன் சன்டனா, ஜொ்ரி, ஸிஸ்கோ ஹொ்ணான்டஸ் ஆகியோா் கோலடிக்கும் பணியை மேற்கொள்வா் என பயிற்சியாளா் ஜோஸப் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com