ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

ஆஸ்திரேலியாவை இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

மூன்று 20 ஓவா், இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

கேப்டன் டிம் பெயின் தலைமையிலான ஆஸி. அணி வலிமையாக உள்ளது.

சொந்த மண் என்பதால் ரசிகா்களின் ஆதரவும் அவா்களுக்கு உள்ளது.

கேப்டன் அஸாா் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் தொடரை சமன் செய்ய முடியும்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உள்ளடக்கிய ஆட்டம் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல் 360 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது.

ஆஸி. 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தத் தொடா்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடங்கிய முதல் தொடராகும்.

இதனிடையே, நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 2-ஆவது டெஸ்டில் வெள்ளிக்கிழமை மோதுகிறது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com