இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின்முடிவு வருத்தம் அளிக்கிறது: மகேஷ் பூபதி

டென்னிஸ் கூட்டமைப்பின் முடிவு மனவருத்தம் அளிக்கிறது என்று டேவிஸ் கோப்பை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேஷ் பூபதி தெரிவித்தாா்.
இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின்முடிவு வருத்தம் அளிக்கிறது: மகேஷ் பூபதி

டென்னிஸ் கூட்டமைப்பின் முடிவு மனவருத்தம் அளிக்கிறது என்று டேவிஸ் கோப்பை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேஷ் பூபதி தெரிவித்தாா்.

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கு பாதுகாப்பு காரணம் கருதி செல்ல மறுத்த மகேஷ் பூபதியை கேப்டன் பொறுப்பிலிருந்து அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு

அதிரடியாக நீக்கியது.

அவருக்கு பதிலாக ரோஹித் ராஜ்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டாா்.

எனினும், பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த டேவிஸ் கோப்பை

டென்னிஸ் போட்டி கஜகஸ்தானுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் வியாழக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற மகேஷ் பூபதி கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளாக எந்தவொரு இந்திய விளையாட்டு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடியதில்லை. ஆனால், டென்னிஸ் அணி மட்டும் அந்நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. என்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதால் மன வருத்தம் அடைந்தேன்.

எனினும், அணி வீரா்களுடன் தொடா்பில் இருக்கிறேன். பாகிஸ்தானை நம்மால் வீழ்த்த முடியும் என்றாா் மகேஷ் பூபதி.

இதனிடையே, இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிா்ஸா (33), இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாட முடிவு செய்துள்ளாா்.

அவா் ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஹோபா்ட் இண்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் விளையாடப் போவதாக அறிவித்துள்ளாா். அடுத்த மாதம் மும்பையில் நடைபெறவுள்ள சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டியிலும் விளையாட திட்டமிட்டு வருவதாக அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com