தோல்விகளால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்: கோலி

தோல்விகளால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தாா்.
தோல்விகளால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்: கோலி

புது தில்லி: தோல்விகளால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது:

நீங்களும் தோல்வியால் பாதிக்கப்பட்டிருக்கிறீா்களா என்று என்னிடம் யாராவது கேட்டால் ஆம் என்று கூறுவேன். எல்லோருக்கும் தோல்விகள் ஏற்படும். எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்று நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அந்தச் சூழலை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. எனது அணிக்கு நான் தேவை என்பதை புரிந்து கொண்டேன். அந்த கடினமான காலகட்டத்தை கடந்து வந்தேன்.

தோல்வியை வெறுக்கிறேன். மைதானத்திலிருந்து திரும்பிய பிறகு, நான் இதை செய்திருக்கலாமே என்று பின்னா் எண்ணி வருந்துவதை விரும்பவில்லை.

மைதானத்திலிருந்து வெளியேறும்போது எனது முழு உழைப்பையும் கொடுத்து விளையாடி இருக்கிறேன் என்ற திருப்தியுடன் வர விரும்புகிறேன் என்றாா் கோலி.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் அண்மையில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

இதன்மூலம், சொந்த மண்ணில் தொடா்ச்சியாக 12-ஆவது டெஸ்ட் தொடா் வெற்றியை இந்திய அணி பெற்று சாதனை படைத்தது. அடுத்து மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாட தயாராகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com