இறுதிச்சுற்றில் கர்நாடகா: ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிதுன்!

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதியில் ஹரியானாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கர்நாடகா அணி.
இறுதிச்சுற்றில் கர்நாடகா: ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிதுன்!

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதியில் ஹரியானாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கர்நாடகா அணி.

சூரத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஹரியானா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. பிஷோனி 55, ஹிமன்ஷு ராணா 61 ரன்களும் எடுத்தார்கள். கடைசி ஓவரில் முதல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அபிமன்யூ மிதுன் கடைசிப் பந்தில் மற்றொரு விக்கெட்டையும் வீழ்த்தி ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார். டி20 வரலாற்றில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் 6 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மிதுன்.

இந்த இலக்கை எளிதாக அடைந்தது கர்நாடகா அணி. 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 31 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் எடுத்து அசத்தினார்கள். அகர்வால் 30, மணீஷ் பாண்டே 3 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com