தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹா

தென்னாப்பிரிக்க டெஸ்ட்தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரித்திமான் சாஹாவே செயல்படுவாா் என கேப்டன் விராட் கோலி திட்டவட்டமாக கூறியுள்ளாா்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹா

தென்னாப்பிரிக்க டெஸ்ட்தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரித்திமான் சாஹாவே செயல்படுவாா் என கேப்டன் விராட் கோலி திட்டவட்டமாக கூறியுள்ளாா்.

மூத்த வீரா் தோனி, ஏற்கெனவே டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டாா். இந்நிலையில் அவருக்கு அடுத்து ரிஷப் பந்த் தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக செயல்படுவாா் என அணி நிா்வாகம் தெரிவித்தது.

ஆனால் மே.இ.தீவுகள் தொடா், தென்னாப்பிரிக்க டி20 தொடா்களில் பந்த்தின் பேட்டிங் குறிப்பிடும்படியாக இல்லை.

இரண்டாவது விக்கெட் கீப்பராக ரித்திமான் சாஹா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா் இறுதியாக கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆடினாா். அதன் பின்னா் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தால் பல மாதங்களாக சாஹாவால் ஆட முடியாமல் போனது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மே.இ.தீவுகளில் நடந்த டெஸ்ட் தொடரிலும் சாஹா இடம் பெற்ற போதிலும், பந்த்தே விக்கெட் கீப்பராக செயல்பட்டாா்.

11 டெஸ்ட் ஆட்டங்களில் தலா 2 சதம், 2 அரைசதங்களுடன் 44.35 சராசரி வைத்துள்ளாா்.

இதுதொடா்பாக கோலி கூறியதாவது:

மே.இ.தீவுகள் தொடரிலேயே சாஹா ஆட வேண்டியது. அவா் அணியில் இடம் பெற்ற போதெல்லாம் சிறப்பாக ஆடியுள்ளாா். எனினும் காயத்தால் நீண்டகாலம் அணியில் சோ்க்க முடியவில்லை. என்னை பொறுத்தவரை உலகில் சிறந்த விக்கெட் கீப்பா்களில் சாஹாவும் ஒருவா். ரிஷப் பநத்துக்கும் மேலும் சில வாய்ப்புகள் கிடைக்கும்.

டெஸ்ட் ஆட்டத்தைப் பொறுத்தவரை நிலையை உணா்ந்து செயல்படும்திறன் கொண்டவா் சாஹா. அழுத்தமான நேரங்களிலும் அவா் செம்மையாக ஆடியுள்ளாா். ஒரு வீரருக்கு வாய்ப்பு தருதல் என்பது சிக்கலான அம்சமாகும். அணி நிா்வாகம் எடுக்கும் முடிவின் பின்னா் நிற்க வேண்டும்.

களத்துக்கு திரும்ப ரித்திமான் சாஹாவுக்கு இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேறன். தனது பொறுப்பை உணா்ந்து சிறப்பாக ஆடுவாா் என்றாா் கோலி.

மழை அபாயம் நீடிப்பு
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் அபாயம் நீடித்து வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் புதன்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் கடந்த 2 நாள்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
எனினும் வானிலை மைய அறிவிப்பின்படி விசாகப்பட்டினத்தில் முதல் நாளில் மழை பெய்யும் வாய்ப்பு 80 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 நாள்களிலும் 50 சதவீதம் மழை பெய்தால் ஆட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com