அகில இந்திய கால்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் முதலிடம்

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கால்பந்து போட்டியில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி முதலிடத்தைப் பிடித்தது.
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணிக்கு கோப்பையை வழங்குகிறார் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி.
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணிக்கு கோப்பையை வழங்குகிறார் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி.

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கால்பந்து போட்டியில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி முதலிடத்தைப் பிடித்தது.
அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுப்பாட்டுக் குழு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விளையாட்டுக் குழு ஆகியவை சார்பில், அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி தூத்துக்குடியில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி துறைமுக பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கொச்சி, பாரதீப், மும்பை, விசாகப்பட்டினம், சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆகிய ஏழு பெரிய துறைமுகங்களின் அணியினர் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணியும், கொல்கத்தா துறைமுக அணியும் மோதின. இதில், 3-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி வ. உ.சி. துறைமுக அணி வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது. கொச்சி மற்றும் சென்னை துறைமுக அணிகள் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ. சி. துறைமுக பொறுப்புக் கழக விளையாட்டுக் கழக தலைவரான தலைமைப் பொறியாளர்  பி. ரவிக்குமார் மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com