பாகிஸ்தான் அதிரடி 305/7

10 ஆண்டுகள் கழித்து கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 305/7 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் அதிரடி 305/7


10 ஆண்டுகள் கழித்து கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 305/7 ரன்களை குவித்தது.
கடந்த 2009-ஆம் ஆண்டு லாகூரில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியின் பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். 2 இலங்கை வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இதனால் எந்த அணியும் பாகிஸ்தானில் சர்வதேச போட்டியில் பங்கேற்க முன்வரவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக மேஇ.தீவுகள், ஜிம்பாப்வே, இலங்கை உள்ளிட்ட அணிகள் சொற்ப ஆட்டங்களில் பங்கேற்று ஆடின.
இந்நிலையில் 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் பங்கேற்க பிரதான வீரர்கள் இல்லாத இலங்கை அணி சென்றுள்ளது. 
முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் திங்கள்கிழமை கராச்சி நேஷனல் மைதானத்தில் 10 ஆண்டுகள் கழித்து நடைபெற்றது.
பாபர் ஆஸம் 115: டாஸ் வென்ற பாக். அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை குவித்தது. 
தொடக்க வீரர்கள் பாக்கர் ஸமான் 54, இமாம் உல் ஹக் 31 ரன்களுடன் வெளியேறிய நிலையில், மூன்றாம் நிலை வீரர் பாபர் ஆஸம் அபாரமாக ஆடி 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 105 பந்துகளில் 115 ரன்களை விளாசினார். ஹாரிஸ்சோஹைல் 40, கேப்டன் சர்பராஸ் அஹமது 8, இமாத் வாஸிம் 12, வஹார் ரியாஸ் 2 ரன்களுடன் வெளியேறினர். இப்திகார் அகமது 32 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை தரப்பில் வனிடு ஹஸரங்கா 2-63 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடக்கமே சரிவு: 306 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்கமே அதிர்ச்சி தரும் வகையில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
தனுஷ்கா குணதிலகா 14, சதீரா சமரவிக்ரமா 6, அவிஷ்கா பெர்ணான்டோ 0, கேப்டன் லஹிரு திரிமனே 0 என வரிசையாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகள் சரிந்தன. உஸ்மான்ஷின்வாரியின் அற்புத பந்துவீச்சில் 3 பேர் அவுட்டாயினர். 10ஆவது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது இலங்கை.
இலங்கை திணறல்: 30-ஆவது ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது. ஷேகன் ஜெயசூர்யா 51, தஸுன் சனகா 44 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com