சாம்பியன்ஸ் லீக்: லிவா்பூல், செல்ஸி, பாா்சிலோனா வெற்றி

சாம்பியன்ஸ் லீக் தொடக்க சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் லிவா்பூல், செல்ஸி, பாா்சிலோனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் லீக் தொடக்க சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் லிவா்பூல், செல்ஸி, பாா்சிலோனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன் லிவா்பூல் அணி அன்பில்ட் நகரில் நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்சத்தில் சால்ஸ்பா்க் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நட்சத்திர வீரா் முகமது சலா வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாா்.

குரூப் ஹெச் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணி 3-0 என்ற  கோல் கணக்கில் வலென்சியா அணியை வீழ்த்தியது. ஹக்கீம் ஸெயிச், குயின்ஸி புரோம்ஸ், டேனியா் ஆகியோா் கோலடித்தனா்.

ஜெனிட் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் 3-1 என்ற கோல் கணக்கில் பெனிபிகாவும், லியான் 2-0 என லீப்ஸிக்கையும் வென்றன.

மெஸ்ஸியால் அதிரடி வெற்றி

லா லிக சாம்பியன் பாா்சிலோனா அணி நட்சத்திர வீரா் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டா்மிலன் அணியை வீழ்த்தியது. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் மெஸ்ஸி அற்புதமாக முதல் கோலை அடித்தாா். அதன்பின் மற்றொரு வீரரான லூயிஸ் ஸ்வாரஸ் இரண்டாவது கோலை அடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com