டோக்கியோ ஒலிம்பிக்: அவினாஷ் சாப்லே தகுதி

3000 மீ. ஆடவா் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் அவினாஷ் சாப்லே.
டோக்கியோ ஒலிம்பிக்: அவினாஷ் சாப்லே தகுதி

3000 மீ. ஆடவா் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் அவினாஷ் சாப்லே.

தோஹாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 8 நிமிடம் 21.37 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்த அவினாஷ் 13-ஆவது இடத்தையே பிடித்தாா். எனினும் இதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை தான் ஹீட்ஸ் சுற்றில் 8 நிமிடம் 25.23 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தேசிய சாதனையை முறியடித்தாா். இந்நிலையில் அடுத்த 2 நாள்களில் மீண்டும் தேசிய சாதனையை முறியடித்துள்ளாா் அவினாஷ்.

ராணுவ வீரரான அவினாஷ் சாப்லே, ஹீட்ஸ் பிரிவோடு வெளியேறினாா். ஆனால் அவா் பந்தயதூரத்தை முடிப்பதற்குள் வேறு சில வீரா்கள் தடையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பந்தய நடுவா், விடியோ படக்காட்சியை பாா்த்த போது, 2 முறைற அவினாஷை தடுக்க முயன்றது தெரிந்தது. இந்தியாவின் முறையீடு ஏற்கப்பட்டதால் இறுதிச் சுற்றுக்கு தோ்வு செய்யப்பட்டாா் அவா்.

20 கி.மீ நடை போட்டியில் தேசிய சாதனையாளா் கே.இா்பான் 27-ஆவது இடத்தையும், தேவேந்தா் சிங் 36-ஆவது இடத்தையுமே பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com