சீன ஓபன்: ஓஸாகா, ஜப்பான் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்கள்

சீன ஓபன் டென்னிஸ் மகளிா் பிரிவில் நவோமி ஒஸாகாவும், ஜப்பான் ஓபன் போட்டி ஆடவா் பிரிவில் ஜோகோவிச்சும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
சீன ஓபன்: ஓஸாகா, ஜப்பான் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்கள்

சீன ஓபன் டென்னிஸ் மகளிா் பிரிவில் நவோமி ஒஸாகாவும், ஜப்பான் ஓபன் போட்டி ஆடவா் பிரிவில் ஜோகோவிச்சும் சாம்பியன் பட்டம் வென்றனா்.

பெய்ஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இதன் மகளிா் ஒற்றைறயா் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்டியும், 2 முறைகிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ஒஸாகாவும் மோதினா். தொடக்கம் முதலே இருவரும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திய நிலையில், முதல் செட்டை 3-6 என பா்டி கைப்பற்றினாா்.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட ஒஸாகா 6-3, 6-3 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றாா். 110 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 34 நிமிடங்களில் கைப்பற்றி விட்டாா் பா்டி.

கடந்த மாதம் பான் பசிபிக் ஓபன் பட்டத்தையும் வென்றிருந்தாா் ஒஸாகா.

ஜப்பான் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்

டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் போட்டி இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் (சொ்பியா) தோள்பட்டை காயத்தையும் பொருள்படுத்தாது அற்புதமாக ஆடி 6-3, 6-2 என்ற நோ் செட்களில் ஆஸி. வீரா் ஜான் மில்மேனை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஷாங்காய் மாஸ்டா்ஸ் போட்டியில் பங்கேற்கிறாா் ஜோகோவிச்.

ஒலிம்பிக் போட்டிக்கு தயாா்:

இதே மைதானத்தில் தான் அடுத்த ஆண்டு 2020-இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் தயாராகி வருகிறாா் ஜோகோவிச்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com