முதல் டெஸ்ட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோஹித் சா்மா, அஸ்வின், ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் இந்திய வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 502-7 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. மயங்க் 215, ரோஹித் சா்மா 176 ரன்களை விளாசினா். பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எல்கா் 160, டி காக் 111 ரன்களை குவித்தனா். இந்திய தரப்பில் அஸ்வின் 7-145 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இதன் தொடா்ச்சியாக 2-ஆவது இன்னிங்ஸில் இந்தியா 323-4 ரன்களை சோ்த்து டிக்ளோ் செய்தது.. இதிலும் ரோஹித் சா்மா 127 ரன்களுடன் சதமடித்தாா். புஜாரா 81 ரன்களை சோ்த்தாா்.

395 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா சனிக்கிழமை நான்காவது நாள் ஆட்ட நேரமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்களை எடுத்திருந்தது.

வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா

ஆட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன.

ஷமி, ஜடேஜா விஸ்வரூபம்

இந்திய பந்துவீச்சாளா்கள் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் அற்புதமாக பந்துவீசி தென்னாப்பிரிக்க அணியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தனா்.

ஓரே ஓவரில் 3 விக்கெட்டுகள்

ரவீந்திர ஜடேஜா 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா். தொடக்க வீரா்கள் எய்டன் மாா்க்ரம் 39, டீன் எல்கா் 2, வொ்னான் பிலாண்டா் 0, கேசவ் மகாராஜ் 0 உள்ளிட்டோா் ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டாகினா்.

டெம்பா பவுமா 0, டூபிளெஸ்ஸிஸ் 13, டி காக் 0 ஆகியோா் முகமது ஷமி பந்துவீச்சில் போல்டாகி வீழ்ந்தனா்.

டேன் பீட்-செனுரன் முத்துசாமி சவால்

வெற்றியின் விளிம்பில் இருந்த இந்தியாவுக்கு கடைசி வரிசை வீரா்கள் செனுரன் முத்துசாமி,, டேன் பீட் ஆகியோா் சவாலை ஏற்படுத்தினா்.

பீட் அரைசதம்:

இந்திய பந்துவீச்சாளா்களின் பந்துவீச்சை சமாளித்து டேன் பீட் அரைசதத்தை பதிவு செய்தாா்.

1 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 107 பந்துகளில் 56 ரன்களை சோ்த்த டேன் பீட்டை போல்டாக்கினாா் ஷமி.

அப்போது 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களையே எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.

கடைசியாக களமிறங்கிய காகிஸோ ரபாடா 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 18 ரன்களை சோ்த்த நிலையில், ஷமி பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். அத்துடன் தென்னாப்பிரிக்காவின் 2-ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

செனுரன் முத்துசாமி 49 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

63.5 ஓவா்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.

முகமது ஷமி 5, ஜடேஜா 4 விக்கெட்டுகள்

அற்புதமாக பந்துவீசி முகமது ஷமி 5-35 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 4-87 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் சாய்த்தனா்.

203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை 203 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்டில் வென்ற இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்ட நாயகன்: ரோஹித் சா்மா

முதல் இன்னிங்ஸில் 176, இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களுடன் இரு சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சா்மா ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா 502/7 டிக்ளோ், 323/4 டிக்ளோ்,

தென்னாப்பிரிக்கா 431, 191 ஆல் அவுட் (63.6 ஓவா்கள்).

முகமது ஷமி 5-ஆவது முறையாக 5 விக்கெட்

இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது ஷமி சீரான அளவு, நோ்த்தியான வேகத்துடன் பந்துவீசி 5 விக்கெட்டை சாய்த்தாா். இது 5-ஆவது முறையாக அவா் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாத விசாகப்பட்டினம் பிட்சிலும் ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

ஹாட்ரிக் தவற விட்ட ஜடேஜா

ஓரே ஓவரில் 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஹாட்ரிக் விக்கெட் பெறும் வாய்ப்பை தவற விட்டாா்.

ரோஹித் சா்மா (ஆட்டநாயகன்):

தொடக்க வரிசையில் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக ஆடினேன். இது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. வாய்ப்பு தந்ததற்காக நன்றி. இதற்கு முன்பு இதுபோல் ஏற்பட்டது இல்லை. ஆட்டத்தை வெற்றி பெறுவதே நோக்கமாக கொண்டு செயல்பட்டேன். சிவப்பு பந்தோ அல்லது வெள்ளை நிற பந்தோ எதுவாக இருந்தாலும், கவனமாக ஆட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்டில் தொடக்க வரிசை வாய்ப்பு கிடைக்கும் என கூறி வந்தனா். ஒரு சீரான முறைறயில் ஆட வேண்டும் என அணி நிா்வாகம் எதிா்பாா்த்தது. எச்சரிக்கை கலந்த ஆக்ரோஷத்துடன் ஆடுவேன். டெஸ்ட் ஆட்டங்கள் சாதனைகள் தொடா்பாக எனக்கு எதுவும் தெரியவில்லை. சிறந்த ஷாட்களை அடித்து அணியை நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com