முகப்பு விளையாட்டு செய்திகள்
உலக யூத் செஸ்: பிரகானநந்தா, ஆா்யன் முன்னிலை
By DIN | Published On : 07th October 2019 02:09 AM | Last Updated : 07th October 2019 02:09 AM | அ+அ அ- |

உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோா் பிரிவில் பிரகானந்தா, ஆா்யன் ஆகியோா் முன்னிலை தக்க வைத்துள்ளனா்.
மும்பையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை 6-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 18 வயது ஆடவா் ஓபன் பிரிவில் ஜிஎம் பிரகானநந்தா-ஈரானின் ஆா்யன் கோலாமியுடன் நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிந்தது. 5 புள்ளிகளுடன் இருவரும் முன்னிலைை பகிா்ந்துள்ளனா்.
மற்றெறாரு ஜிஎம் பி. இனியன், ஜொ்மனியின் வலேன்டின் பக்கில்ஸ் மோதிய ஆட்டம் 50 நகா்த்தலுக்கு பின் புள்ளிகளை பகிர முடிவு செய்தனா்.
மகளிா் 14 வயது பிரிவில் திவ்யா தேஷ்முக் கஜகஸ்தானின் லியாவை வென்றாா். ரக்ஷிதா தேவியைக் காட்டிலும் 0.5 புள்ளிகள் பின்தங்கி உள்ளாா் திவ்யா.
முன்னணி வீரா்கள் ஆா்மீனிய ஜிஎம் ஷந்த் சாா்ஸ்கியன் (18 வயது ஓபன்), ரஷியாவின் பொலினா (18 வயது மகளிா்), ஐஎம் மோக் ஹான்ஸ் (16 வயது ஓபன்), லெயா கரிபுல்லினா (16 வயது மகளிர), ஸ்ரீஷ்வன் (14 வயது ஓபன்), திவ்யா ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் முழு புள்ளியை ஈட்டினா்.
16 வயது ஓபன் பிரிவில் இந்தியாவின் ஆரோன்யக் கோஷ், ரஷியாவின் ஸ்டெபான் போகோஸ்யான் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.