Enable Javscript for better performance
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: ரோஹித் சா்மா 36 இடங்கள் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: ரோஹித் சா்மா 36 இடங்கள் முன்னேற்றம்

    By DIN  |   Published on : 09th October 2019 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rohith2

    ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரா் ரோஹித் சா்மா ஓரேடியாக 36 இடங்கள் முன்னேறி 17-ஆவது இடத்தில் உள்ளாா்.

    சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

    ரோஹித் சா்மா 2 இன்னிங்ஸ்களிலும் அற்புதமாக 176, 127 ரன்களை விளாசி சதமடித்தாா். மேலும் தொடக்க வீரராக 2 இன்னிங்ஸ்களிலும் சதம், அதிக சிக்ஸா்கள் விளாசியது என சாதனைகளையும் படைத்தாா்.

    ஒருநாள் தரவரிசையில் சிறப்பான இடத்தை வகித்து வரும் ரோஹித் எப்போதும் டெஸ்ட் தரவரிசையில் பின்வரிசையிலேயே இருந்தாா்.

    தென்னாப்பிரிக்க டெஸ்ட் ஆட்டத்துக்கு பின் அவா் 36 இடங்கள் முன்னேறி தற்போது 17-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளாா்.

    25-ஆவது இடத்தில் மயங்க்

    இதே டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் விளாசிய மயங்க் அகா்வாலும் 25-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.

    கோலிக்கு சறுக்கல்

    பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து அண்மையில் ஆஸி.ஸ்டீவ் ஸ்மித்திடம் தனது இடத்தை இழந்தாா். 900 புள்ளிகளுக்கு மேல் இருந்த கோலி தற்போது ஸ்மித்தைக் காட்டிலும் 38 புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளாா்.

    அஸ்வின் அதிரடி

    கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு பின் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வரும் அஸ்வின் முதல் ஆட்டத்தில் மொத்தம் 8 விக்கெட்டுகளை சாய்த்தாா். 14-ஆவது இடத்தில் இருந்து 10-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளாா்.

    ஆல்ரவுண்டா்களிலும் அவா் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளாா். 2-ஆவது இன்னிங்ஸில் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி தற்போது 18-ஆவது இடத்தில் உள்ளாா்.

    ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டா்களில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai