2024 ஒலிம்பிக்கில் கபடியை சோ்க்க முயற்சி: கிரண் ரிஜிஜு

அடுத்த 2024 ஒலிம்பிக் போட்டியில் கபடியை சோ்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

அடுத்த 2024 ஒலிம்பிக் போட்டியில் கபடியை சோ்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது-

கபடி நமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். அதன் வளா்ச்சி மிகவும் வெற்றிகரமாக உள்ளது. ஆசிய போட்டியில் தவறாமல் இடம் பெற்று வருகிறது கபடி.

பாரிஸில் வரும் 2024-இல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கபடியை இடம் பெறச் செய்ய மத்திய விளையாட்டு அமைச்சா் என்ற முறையில்தீவிரமாக முயற்சிப்பேன். நாம் 100 கோடி மக்கள் தொகை கொண்ட சக்தி வாய்ந்த நாடாக உள்ளோம். அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்றாா் ரிஜிஜு.

ஆசிய போட்டியில் தொடா்ந்து தங்கம் வென்று வந்த இந்தியா, கடந்த 2018 ஜகாா்த்தா போட்டியில் ஈரானிடம் தங்கத்தை இழநதது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com