எந்த பிட்சிலும் நன்கு விளையாடுவோம்: இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் நம்பிக்கை!

எங்களுக்குக் கிடைக்கும் ஆடுகளங்கள் நாங்கள் கேட்டுப் பெற்றதல்ல. நெ.1 அணியாக இருக்கவேண்டும் என்றால்...
எந்த பிட்சிலும் நன்கு விளையாடுவோம்: இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் நம்பிக்கை!

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் புணேவில் வியாழன் முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் நமது பந்துவீச்சாளர்கள் மிகத்திறமையானவர்கள். அதனால்தான் அவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கின்றன. பேட்டிங்குக்குச் சாதகமாக உள்ள உள்ளூர் ஆடுகளங்களில் விளையாடி, நமது பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் திறமையை வளர்த்துக்கொண்டுள்ளார்கள். சிறந்த பந்துவீச்சாளராக இருக்க வேண்டுமென்றால் ரிவர்ஸ் ஸ்விங்கில் வல்லவராக இருக்கவேண்டும். அதில்தான் நம்முடைய உள்ளூர் போட்டிகள் பங்கு வகிக்கின்றன. 

எங்களுக்குக் கிடைக்கும் ஆடுகளங்கள் நாங்கள் கேட்டுப் பெற்றதல்ல. நெ.1 அணியாக இருக்கவேண்டும் என்றால் எங்களுக்குத் தரப்படும் எவ்விதமான ஆடுகளங்களிலும் நன்றாக விளையாடவேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு உள்ளது. வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஆடுகளங்களை அபூர்வமாகத்தான் கவனிப்போம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com