Enable Javscript for better performance
அதிக முட்டை வாங்கும் வீரர் யார்?: சாதனையைச் சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!- Dinamani

சுடச்சுட

    

    அதிக முட்டை வாங்கும் வீரர் யார்?: சாதனையைச் சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!

    By எழில்  |   Published on : 08th October 2019 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    umar_akmal1xx

     

    டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்கிற விநோத சாதனையைச் சமன் செய்துள்ளார் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்.

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டக் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், நேற்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்திலும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதுவரை 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள உமர் அக்மல், 10 முறை டக் அவுட் ஆகி விநோத சாதனையைச் செய்துள்ளார். இலங்கை வீரர் தில்ஷன், 80 ஆட்டங்களில் 10 தடவை ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். தற்போது, டி20 ஆட்டத்தில் அதிக தடவை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்கிற தில்ஷனின் இந்த விநோத சாதனையைச் சமன் செய்துள்ளார் உமர் அக்மல். 9 டக்குகளுடன் இங்கிலாந்து வீரர் லூக் ரைட் 3-வது இடத்தில் உள்ளார்.

    இன்னொருமுறை டக் அவுட் ஆனால் தில்ஷனின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார் உமர் அக்மல். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai