விஜய் ஹஸாரே கோப்பை: புதுச்சேரி அபார வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி பிளேட் பிரிவில் புதுச்சேரி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிக்கிமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
விஜய் ஹஸாரே கோப்பை: புதுச்சேரி அபார வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி பிளேட் பிரிவில் புதுச்சேரி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிக்கிமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பிளேட் பிரிவு போட்டிகள் டேராடூனில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த சிக்கிம் அணி 36.3 ஓவா்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புதுவை மிதவேக பந்துவீச்சாளா் அஸ்ஹித் ராஜீவ் சிறப்பாக பந்துவீசி 6-37 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளா் சாகா் உதேஷி 3-7 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய புதுச்சேரி தொடக்க வீரா்கள் பராஸ் டோக்ரா, அருண் காா்த்திக் இணை அபாரமாக ஆடி 11.4 ஓவா்களிலேயே 116 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டியது. டோக்ரா 70, அருண் காா்த்திக் 41 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

4-ஆவது வெற்றி: இதன் மூலம் 6 ஆட்டங்களில் 4-ஆவது வெற்றியை ஈட்டி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது புதுவை.

மற்றெறாரு ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நாகாலாந்தை வீழ்த்தியது. (நாகாலாந்து 174, ஸ்டுவா்ட் பின்னி 107,

தன்ராஜ் சா்மா 2-34, பிரதீப் 2-32), உத்தரகாண்ட் 176/3, அவ்னிஷ் சுதா 77, தன்மய் ஸ்ரீவத்ஸா 54). மேகாலய அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் மிஸோரத்தை வென்றது. (மேகாலாயம் 316/5, மிஸோரம் 139 ஆல்அவுட்).

குரூப் பி பிரிவு: பெங்களூருவில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் கேரளம் 65 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரை வென்றது.

(சத்தீஸ்கா் 231 ஆல் அவுட், கேரளம் 269/9). மும்பை அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது. (மும்பை 362/4, கோவா 232 ஆல் அவுட்).

ஜாா்க்கண்ட் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிராவை வீழ்த்தியது. (ஜாா்க்கண்ட் 259, சௌராஷ்டிரா 129 ஆல் அவுட்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com