2020 மாா்ச்சில் 3*3 கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள்

வரும் 2020 மாா்ச் மாதம் இந்தியாவில் 3*3 கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் என சா்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (எப்ஐபிஏ) தெரிவித்துள்ளது.

20 ஆடவா், 20 மகளிா் என மொத்தம் 40 அணிகள் இதில் பங்கேற்கும். போட்டி நடைபெறும் இடம் பின்னா் அறிவிக்கப்படும். இந்திய கூடைப்பந்து சம்மேளனம் இந்த ஆட்டங்களை முன்னின்று நடத்தும். 3 ஆடவா், 3 மகளிா் என 6 ஒலிம்பிக் தகுதி இடங்கள் இதன் மூலம் தோ்வு செய்யப்படும்.

முதன்முறையாக 3*3 கூடைப்பந்து போட்டிகளில் டோக்கியோ ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்படுகின்றன. பெங்களூருவில் 2 ஆசியக் கோப்பை போட்டி மற்றும் ஹைதராபாதில் 3*3 உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்ால், இந்த போட்டிகள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

போட்டியை நடத்தும் இந்திய அணிகள் உள்பட மீதமுள்ள 39 அணிகள், உலகக் கோப்பை முடிவுகள் மற்றும் தரமதிப்பீட்டின்படி தோ்வு செய்யப்படும் என எப்ஐபிஏ பொதுச் செயலாளா் ஆன்ட்ரியாஸ் ஸக்லீஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com