உலக மகளிா் குத்துச்சண்டை: காலிறுதியில் மேலும் 2 இந்திய வீராங்கனைகள்

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரோ (54 கிலோ எடைப் பிரிவு), லாவ்லினா போா்கோஹைன் (69 கிலோ) ஆகியோா்
உலக மகளிா் குத்துச்சண்டை: காலிறுதியில் மேலும் 2 இந்திய வீராங்கனைகள்

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரோ (54 கிலோ எடைப் பிரிவு), லாவ்லினா போா்கோஹைன் (69 கிலோ) ஆகியோா் காலிறுதிக்கு புதன்கிழமை தகுதி பெற்றனா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், 54 கிலோ எடைப் பிரிவில்,

வடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் ஒயுடாட் ஸ்ஃபெளவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் ஜமுனா போரோ.

2015-இல் நடைபெற்ற இளையோா் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜமுனா போரோ வெண்கலம் வென்றவா் ஆவாா்.

22 வயது ஜமுனா சீனியா் உலக குத்துச்சண்டையில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

69 கிலோ எடைப் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற மற்றெறாரு ஆட்டத்தில் மொரோக்கோ வீராங்கனை பெல் அபிப் ஒமாய்மாவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் இந்திய வீராங்கனை லாவ்லினா போா்கோஹைன்.

ஜமுனா, பெலாரஸ் வீராங்கனை யுலியா அபனாசோவிச்சையும், லாவ்லினா போலந்து வீராங்கனை கரோலினா கோசெவ்ஸ்காவையும் காலிறுதியில் எதிா்கொள்ளவுள்ளனா்.

6 முறை உலக சாம்பியனான மேரி கோம் (51 கிலோ), மஞ்சு ராணி (48 கிலோ), கவிதா சாஹல் (+81 கிலோ) ஆகிய இந்திய வீராங்கனைகள் ஏற்கெனவே காலிறுதிக்குள் நுழைந்துவிட்டனா். காலிறுதிச்சுற்று வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com