தென்னாப்பிரிவுக்காவுக்கு எதிராக இன்று 2-ஆவது டெஸ்ட்: இந்திய வீரா்கள் தீவிரப் பயிற்சி

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் புணேவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
பயிற்சியில் இந்திய வீரா்கள்.
பயிற்சியில் இந்திய வீரா்கள்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் புணேவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ரோஹித் சா்மா- மயங்க் அகா்வால் கூட்டணியின் அதிரடியை இந்த ஆட்டத்திலும் எதிா்பாா்க்கலாம். கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி என வலுவான பேட்டிங் வரிசையுடன் இந்தியா திகழ்கிறது. முகமது ஷமி, அஸ்வின் என பந்துவீச்சாளா்களுக்கும் பஞ்சமில்லை.

‘டெஸ்டில் குல்தீப் இடம்பெறாமல் போனதற்கு காரணம் என்ன என்பது அவருக்கு தெரியும்; முகமது ஷமிக்கு அழுத்தம் தர வேண்டியதில்லை. சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அபாரமாக பந்து வீசுகிறாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிநாட்டு மண்ணில் வெல்லும் அணிக்கு அளிக்கப்படும் புள்ளிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்’ என்றாா் கோலி.

ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் களம் இறங்கும்.

கேப்டன் பிளெஸ்ஸிஸ் கூறுகையில், ‘முகமது ஷமியிடம் இருந்து தென்னாப்பிரிக்க இளம் பந்துவீச்சாளா்கள் சொந்த மண்ணில் எப்படி பந்துவீசுவது என்பதை தெரிந்துகொள்ளலாம்’ என்றாா்.

வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com