ரபாடா ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்; ஆனால் நான்.. : புஜாரா

தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்டில் ரபாடா ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டது குறித்து பதிலளித்த புஜாரா, அவர் கூறியது நினைவில் இல்லை என சர்ச்சையைத் தவிர்த்துள்ளார்.
ரபாடா ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்; ஆனால் நான்.. : புஜாரா


தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்டில் ரபாடா ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டது குறித்து பதிலளித்த புஜாரா, அவர் கூறியது நினைவில் இல்லை என சர்ச்சையைத் தவிர்த்துள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் புணேவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அக்ர்வால் இந்த ஆட்டத்திலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்த புஜாராவும் அரைசதம் அடித்தார். அவர் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க அணித் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் ககிசோ ரபாடாதான் கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தின் நடுவே புஜாரா விக்கெட்டை வீழ்த்தியபோது, ரபாடா ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து புஜாரா தெரிவிக்கையில்,

"ரபாடா கூறியது சரியாக நினைவில் இல்லை. அவர் எப்போதுமே பேட்ஸ்மேன்களுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட விரும்புவார். ஒரு பேட்ஸ்மேனாக, ரபாடா எனது கவனத்தை சிதறடிக்க முயற்சிப்பார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மட்டுமல்ல, எந்தவொரு பந்துவீச்சாளரும் ஏதெனும் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், அதைக் கேட்பதை நான் தவிர்த்துவிடுவேன்.

நாம் நமது மனநிலையில் இருந்தால், அவர்கள் சொல்வது எதுவும் கேட்காது. ஏனென்றால், ஒரு பேட்ஸ்மேனாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் முழு கவனமும் இருக்கும். அதனால், நமது நிலையில் இருக்கும்போது அவர்கள் சொல்வதை நாம் கவனிக்க மாட்டோம்" என்றார்.

இந்த பதில் மூலம், புஜாராவும் இதுதொடர்பான சர்ச்சையை வளரவிடாமல் தவிர்த்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com