ரிக்கி பாண்டிங் சாதனையைச் சமன் செய்தார் விராட் கோலி!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகத் தனது 26-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் சாதனையைச் சமன் செய்தார் விராட் கோலி!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகத் தனது 26-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பரில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்தார் கோலி. அதன்பிறகு அவர் 5 டெஸ்டுகள் விளையாடியும் அடுத்தச் சதத்தை எடுக்கமுடியவில்லை. இதனால் இந்த டெஸ்டில் கோலி சதமெடுப்பார் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றினார் கோலி. இதுதான் 2019-ல் கோலி எடுக்கும் முதல் சதம். 

கேப்டனாக கோலியின் 19-வது சதம் இது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் கேப்டனாக 19 சதம் எடுத்திருந்தார். அவருடைய சாதனையை கோலி சமன் செய்துள்ளார். கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்தவர், தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித். அவர் 25 சதங்கள் எடுத்துள்ளார். 

விரைவாக 26 டெஸ்ட் சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கோலிக்கு 4-ம் இடம் கிடைத்துள்ளது. 138 இன்னிங்ஸ்களில் 26 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார். 

இந்த இன்னிங்ஸில் மற்றொரு முக்கியமான சாதனையையும் நிகழ்த்தினார் கோலி. இந்திய முன்னாள் வீரர் வெங்சர்கார் 116 டெஸ்டுகளில் எடுத்த 6868 டெஸ்ட் ரன்களை இந்த இன்னிங்ஸில் கடந்தார் கோலி. இதன் அடிப்படையில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 7-ம் இடத்தைப் பிடித்தார் கோலி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com