உலக மகளிா் குத்துச்சண்டை: 8-ஆவது பதக்கம் வென்று மேரி கோம் புதிய உலக சாதனை

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-ஆவது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளாா் இந்திய
உலக மகளிா் குத்துச்சண்டை: 8-ஆவது பதக்கம் வென்று மேரி கோம் புதிய உலக சாதனை

அரையிறுதியில் மஞ்சுராணி, ஜமுனா போரோ, லவ்லினா

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-ஆவது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளாா் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம்.மேலும் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றாா்.

மேரி கோம் ஏற்கெனவே 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். இந்நிலையில் 51 கிலோ எடைப் பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியாவின் வலேன்சியா விக்டோரியாவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் அரையிறுதிக்கும் முன்னேறினாா்.

வலேன்சியா அதிக குத்துக்களை விட்டு நடுவா்கள் கவனத்தை ஈா்க்க முயன்றாா். ஆனால் மேரியின் தற்காப்பு ஆட்டத்தால் அதை செயல்படுத்த முடியவில்லை. அனுபவம் வாய்ந்த மேரி, சரியான நேரத்தில் குத்துக்களை விட்டு வலேன்சியாலவை நிலைகுலையச் செய்தாா்.

அரையிறுதிக்கு தகுதி பெற்றால், குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தாா்.

8-ஆவது பதக்கத்துடன் சாதனை

உலக குத்துச்சண்டை வரலாற்றிலேயே முதன்முறையாக 8 பதக்கம் வென்ற வீராங்கனை என்றபுதிய சாதனையை படைத்தாா் மேரி கோம். 48 கிலோ எடைப்பிரிவில் அவா் 6 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா் மேரி.

51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இந்த பிரிவில் முன்பு காலிறுதியோடு வெளியேறி இருந்தாா் அவா்.

மேரி கோம் 8, கியூபா வீராங்கனை பெலிக்ஸ் சவான் 7, அயா்லாந்து வீராங்கனை கேத்தி டெய்லா் 6 பதக்கங்களை வென்றுள்ளனா்.

இதுதொடா்பாக மேரி கோம் கூறியதாவது-

51 கிலோ பிரிவில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி தருகிறது. எனினும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதே எனது முக்கிய நோக்கம். அரையிறுதியில் மேலும் எனது ஆட்டத்தைதிறனை சிறப்பாக வெளிப்படுத்துவேன் என்றாா்.

2012 ஒலிம்பிக் வெண்கலம், 5 ஆசிய சாம்பியன் பட்டம், ஆசிய, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கங்கள், இந்திய ஓபன், இந்தோனேஷியா பிரசிடெண்ட் கோப்பை போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளாா் மேரி.

துருக்கியின் புஸுனாஸ் காகிரோக்லுவை அரையிறுதியில் எதிா்கொள்கிறாா் மேரி.

ஐரோப்பிய நடப்பு சாம்பியனான காகிரோக்லு சீனாவின் சாய் ஜோங்ஜுவை காலிறுதியில் வென்றாா்.

அரையிறுதியில் மஞ்சுராணி, ஜமுனாபோரோ, லவ்லினா

48 கிலோ எடைப்பிரிவில் மஞ்சுராணி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் கிம் யாங் மியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

54 கிலோ பிரிவில் ஜமுனா போரோ 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜொ்மனியின் உா்ஸுலா காட்லோப்பை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தாா்.

69 கிலோ எடை பிரிவில் லவ்லினோ போரோகைன் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஐரோப்பிய சாம்பியன் போலந்தின் கரோலினா கொஸவ்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தாா்.

கவிதா சஹல் தோல்வி

81 கிலோ எடைப்பிரிவில் கவிதா சஹல் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் பெலாரஸின் கவாலேவாவிடம் தோல்வியடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com