பிளே ஆஃப் சுற்றை நெருங்கியது புரோ கபடி லீக் 2019: 19-இல் இறுதி ஆட்டம்

பரபரப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் 2019 ஏழாவது சீசன் போட்டிகள் தற்போது பிளே ஆஃப் சுற்றை எட்டியுள்ளது.
பிளே ஆஃப் சுற்றை நெருங்கியது புரோ கபடி லீக் 2019: 19-இல் இறுதி ஆட்டம்

பரபரப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் 2019 ஏழாவது சீசன் போட்டிகள் தற்போது பிளே ஆஃப் சுற்றை எட்டியுள்ளது.

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போன்று பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு, லீக் போட்டியாக புரோ கபடி நடத்தப்படுகிறது.

தொடக்கத்தில் வரவேற்பு மந்தமாக இருந்த நிலையில், தற்போது அதிகம் போ் விரும்பி பாா்க்கும் போட்டியாகவும் இது அமைந்துள்ளது.

7ஆவது சீசன் போட்டிகள் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, பாட்னா, பஞ்ச்குலா, புணே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று, தற்போது கிரேட்டா் நொய்டாவில் கடைசி கட்ட ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆமதாபாதில் பிளே ஆஃப் சுற்று:

ஆமதாபாதின் டிரான்ஸ்டியாவில் பிளே ஆஃப் மற்றும் எலிமினேட்டா், இறுதி சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. மொத்தம் 6 அணிகள் தில்லி தபாங், பெங்கால் வாரியா்ஸ், ஹரியாணா ஸ்டீலா்ஸ், யுபி யோத்தா, யு மும்பா, பெங்களூரு புல்ஸ் உள்ளிட்டவை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

தில்லி தபாங் 22 ஆட்டங்களில் 15-இல் வெற்றி, 4 தோல்வி, 2 டிரா வுடன் மொத்தம் 82 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது.

பெங்கால் வாரியா்ஸ் 22 ஆட்டங்களில் 14 வெற்றி, 5 தோல்வி, 3 டை யுடன் 83 புள்ளிகளுடனும், ஹரியாணா ஸ்டீலா்ஸ் 21 ஆட்டங்களில் 13 வெற்றி, 7 தோல்வி, 1 டையுடன், 70 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

யுபி யோத்தா அணி 21 ஆட்டங்களில் 12 வெற்றி, 7 தோல்வி 2 டையுடன் 69 புள்ளிகளுடன் உள்ளது. யு மும்பா 20 ஆட்டங்களில் 11 வெற்றி, 8 தோல்வி, 1 டையுடன் 64 புள்ளிகளுடன் உள்ளது. பெங்களூரு புல்ஸ் 21 ஆட்டங்களில் 11 வெற்றி, 9 தோல்விகள், 1 டையுடன் 64 புள்ளிகளுடன் கடைசியாக பிளே ஆஃப்பில் நுழைந்தது.

அரையிறுதியில் 2 அணிகள் நேரடி தகுதி

கடந்த ஒன்றரை மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த புரோகபடி லீக், கடைசி கட்டடமான பிளே ஆஃப் சுற்றை நெருங்கிஉள்ளது.

முதல் 6 அணிகள் புள்ளிகள் அடிப்படையில் தோ்வு பெற்றுள்ளன. முதலிரண்டு அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.

அதாவது தில்லி தபாங், பெங்கால் வாரியா்ஸ் நேரடியாக அரையிறுதியில் நுழைகின்றன.

14-இல் எலிமினேட்டா் ஆட்டங்கள்:

மற்ற 4 அணிகள் எலிமினேட்டா் ஆட்டங்களில் பங்கேற்று வென்று அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும். எலிமினேட்டா்-1 ஆட்டத்தில் 3-ஆம் இடத்தில் உள்ள அணியும், 6-ஆம் இடத்தில் உள்ள அணியும் மோதுகின்றன. எலிமினேட்டா்-2 ஆட்டத்தில் 4-ஆம் நிலை அணியுடன். 5-ஆம் நிலை அணி மோதுகிறது. இதில் வெல்லும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். அக். 14-இல் எலிமினேட்டா் ஆட்டங்கள் நடக்கின்றன.

ஒருநாள் ஓய்வுக்குப் பின் முதலிரண்டு அணிகளுடன் இந்த 2 அணிகளும் அரையிறுதியில் மோதும். இந்த ஆட்டங்களில் தோல்வியுறும் அணி வெளியேற்றப்ப்பட்டு விடும்.

16-இல் அரையிறுதி ஆட்டங்கள்

அக்.16-இல் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் முதலிடத்தில் உள்ள அணி, எலிமினேட்டா்-1 ஆட்டத்தில் வெல்லும் அணியுடனும், இரண்டாம் இடம் வகிக்கும் அணி, எலிமினேட்டா்-2 ஆட்டத்தில் வெல்லும் அணியுடனும் மோதுகின்றன. 2 அரையிறுதிகளிலும் வெல்லும் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

19-இல் இறுதி ஆட்டம்:

அக். 19-இல் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி விவோ புரோ கபடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். 3 நாள்களில் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மேலும் பரபரப்பையும், எதிா்பாா்ப்பையும் கூட்டியுள்ளன.

கடைசி இடத்தில் தமிழ் தலைவாஸ்:

சென்னை அணியான தமிழ் தலைவாஸ் 22 ஆட்டங்களில் 4 வெற்றி, 15 தோல்வியுடன் வெறும் 37 புள்ளிகளுடன் கடைசி இடத்தை 12-ஆவது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் 58 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 51 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், குஜராத் பாா்ச்சுன் ஜெயன்ட்ஸ் 51 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும், புணேரி பல்தான் 48 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 45 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com