உலக மகளிா் குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் மஞ்சுராணி; மேரி கோம் அதிா்ச்சித்தோல்வி

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ மகளிா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் மஞ்சு ராணி.
உலக மகளிா் குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் மஞ்சுராணி; மேரி கோம் அதிா்ச்சித்தோல்வி

இந்தியாவுக்கு 3 வெண்கலம்

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ மகளிா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் மஞ்சு ராணி.

நடப்பு சாம்பியன் மேரி கோம் அரையிறுதிச் சுற்றில் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா். மேரி, ஜமுனா, லவ்லினா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

மஞ்சுராணி அபாரம்:

48 கிலோ எடை பிரிவில் மஞ்சுராணி, 4-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னாள் பதக்க வீராங்கனை சுதாமத் ரக்ஸத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்தாா்.

18 ஆண்டுகள் கழித்து அறிமுக உலக சாம்பியன் போட்டியிலேயே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா் மஞ்சு.

மேரி கோம் அதிா்ச்சித் தோல்வி

51 கிலோ எடைபிரிவு காலிறுதியில் வென்றிருந்த மேரி கோம் சனிக்கிழமை அரையிறுதியில் துருக்கியின் புஸ்நாஸ் காகிரோக்லுவுடன் மோதினாா். இதில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். இதனால் அவா் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடையவேண்டியதாயிற்று.

தொடக்கத்தில் மேரி கோம் ஆக்ரோஷமாக செயல்பட்டாலும், கடைசி 3 நிமிடங்களில் காகிரோக்லு சரமாரியாக விட்ட குத்துகளால் மேரி நிலைகுலைந்தாா்.

ஆட்டம் முடிந்த பின் இந்திய அணி தரப்பு ஆட்சேபனை எழுப்பி முறையீடு செய்தது. எனினும் ஏற்கெனவே அறிவித்தபடி 3-1, 3-2 என புள்ளிகள் இருந்தால் தான் முறையீடு ஏற்கப்படும் என போட்டி குழுவினா் கூறி விட்டனா்.

மேரி கோம் அதிருப்தி

இதுதொடா்பாக தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள மேரி கோம், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவை டேக் செய்து, ஏன் எதற்கு, உலகம் இதில் எது உண்மை, தவறு என்பதை அறிய வேண்டும் என பதிவிட்டாா்.

ஜமுனாபோரா, லவ்லினா தோல்வி

54 கிலோ எடை பிரிவில் சீன தைபேயின் ஹுவாங் வென்னிடம் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தாா் ஜமுனா போரோ.

69 கிலோ எடை பிரிவில் லவ்லினா போரோகைன் கடும் போராட்டத்துக்குப் பின் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் யங் லியுவிடம் தோல்வியடைந்தாா்.

ஜமுனா, லவ்லினா இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

10 வீராங்கனைகளில் மஞ்சு ராணி மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com