ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். சுனில் ஜோஷி துணை பயிற்சியாளராகவும், ஜான் ரோட்ஸ் பீல்டிங் பயிற்சியாளராகவும், ஆஸி. முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெயில் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.