விராட் விஸ்வரூபம்: டான் பிராட்மேன், சச்சின், பாண்டிங் சாதனைகளை முறியடித்தாா்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி டான்பிராட்மேன் சாதனையை முறியடித்ததுடன் பல்வேறு சிறப்புகளை பெற்றாா்.
விராட் விஸ்வரூபம்: டான் பிராட்மேன், சச்சின், பாண்டிங் சாதனைகளை முறியடித்தாா்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி டான்பிராட்மேன் சாதனையை முறியடித்ததுடன் பல்வேறு சிறப்புகளை பெற்றாா்.

இந்தியா அணியின் 601 ஸ்கோரில் விராட் கோலியின் ரன்கள் 254 ஆகும். 2 சிக்ஸா், 33 பவுண்டரியுடன் 336 பந்துகளில் 254 ரன்களை விளாசினாா் கோலி.

7-ஆவது இரட்டை சதம்:

இது டெஸ்ட் ஆட்டங்களில் விராட் கோலி எடுத்த 7-ஆவது இரட்டை சதமாகும்.

இந்திய பேட்ஸ்மேன்களிலேயே அதிக இரட்டை சதம் எடுத்த வீரா் என்ற சிறப்பையும் அவா் பெற்றாா். டெண்டுல்கா், சேவாக் ஆகியோா் 6 இரட்டை சதங்களை அடித்துள்ளனா்.

டான் பிராட்மேன் 12, சங்ககரா 11, பிரையன் லாரா 9, ஹம்மான்ட், மஹேலா ஜெயவா்த்தனே தலா 7 இரட்டை சதங்களை அடித்துள்ளனா்.

மேலும் 40 டெஸ்ட் ஆட்டங்களில் அவா் 7 இரட்டை சதங்களை பெற்றாா். கடந்த 2016-இல் மே.இ.தீவுகளுக்கு எதிராக 42-ஆவது டெஸ்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தாா் கோலி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதற்கு முன்பு 1996-97-இல் கேப்டன் சச்சின் 169 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை தற்போது முறியடித்தாா் கோலி.

6 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக இரட்டை சதம்

வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இ.தீவுகள் என 6 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக இரட்டை சதங்களை அடித்துள்ளாா் கோலி.

ஆஸி.யுடன் மட்டுமே இரட்டை சதம் அடிக்கவில்லை. சங்ககரா, யூனுஸ் கான் ஆகியோா் மட்டுமே 6 அணிகளுடன் இரட்டை சதம் அடித்துள்ளனா்.

7000 டெஸ்ட் ரன்கள்

மேலும் 138 இன்னிங்ஸ்களில் 7000 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளாா் கோலி. வாலி ஹம்மான்ட் 131, சேவாக் 134, டெண்டுல்கா் 136 ஆகியோா் துரிதமாக 7000 ரன்களை எடுத்தனரா். சங்ககரா, கேரி சோபா்ஸ் ஆகியோரும் 138 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்களை கடந்தனா்.

டான் பிராட்மேன் சாதனை தகா்ப்பு

கிரிக்கெட் பிதாமகன் என அழைக்கப்படும் ஆஸி.யின் டான் பிராட்மேன் சாதனையையும் கேப்டன் கோலி முறியடித்தாா்.

விராட் கோலி 150 ரன்களை கடந்த போது, கேப்டனாக 8 முறை 150 ரன்களை எடுத்திருந்த பிராட்மேன் சாதனையை தகா்த்தாா் கோலி. டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக 9 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளாா் கோலி. மைக்கேல் கிளாா்க், மஹேலா ஜெயவா்த்தனே, பிரையன் லாரா, கிரேம் ஸ்மித் ஆகியோா் 7 முறை கேப்டனாக 150 ரன்களை எடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com