Enable Javscript for better performance
T10 best format to represent cricket at Olympics- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பிக்ஸுக்கு இந்த கிரிக்கெட் தான் பொருத்தமாக இருக்கும்: சாஹித் அஃப்ரிடி கருத்து

    By எழில்  |   Published on : 14th October 2019 02:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AFRIDI1

     

    அபுதாபி டி10 லீகில் அறிமுகமாகவுள்ள முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி, ஒலிம்பிக்ஸுக்கு டி10 கிரிக்கெட் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    அவர் மேலும் கூறியதாவது:

    பரபரப்பாக, விரைவாக நடைபெறுவதால் ரசிகர்களுக்கு டி10 கிரிக்கெட் ஆட்டம் மிகவும் பிடிக்கிறது. ஆட்டமும் 90 நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அபுதாபி டி10 லீக் போட்டி இந்த வகை கிரிக்கெட்டைப் பரிசோதிக்க சரியான களமாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒலிம்பிக்ஸுக்குக் கொண்டு செல்ல டி10 ஆட்டம் உதவும். 

    ஆரம்பத்தில் டி20 கிரிக்கெட்டையும் யாரும் ஏற்கவில்லை. ஆனால் இன்று டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே எதிர்காலத்தில் அதிகமான சர்வதேச வீரர்கள் அபுதாபி டி10 லீகில் இடம்பெறுவார்கள் என்று கூறியுள்ளார். 

    அபுதாபி டி10 லீக் போட்டி, ஐக்கிய அமீரகத்தில் நவம்பர் 14 முதல் 24 வரை நடைபெறவுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai