உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் சமனில் இருந்து முடிந்தது!

2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் சமனில் இருந்து முடிந்தது!


2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

கத்தாரில் வரும் 2022-இல் உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிக்கு ஆசிய கண்டத்தில் இருந்து அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆசிய ஓசியானா பகுதியைச் சேர்ந்த 40 நாடுகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதிச் சுற்று நடந்து வருகிறது. ஆசிய சாம்பியன் கத்தார், இந்தியா, ஓமன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவை குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற முதல் உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி ஓமனை எதிர்கொண்டது. இதில், 1-0 என முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, கடைசி கட்டத்தில் ஓமன் அடித்த 2 கோல்களைத் தடுக்க முடியாததால் தோல்வியடைந்தது.

இதையடுத்து, தகுதிச் சுற்றில் தனது 2-வது ஆட்டத்தில் இந்திய அணி ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில், வங்கதேச அணி தரவரிசையில் இந்தியாவைவிட 83 இடங்கள் பின்தங்கியிருந்தாலும் இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் அச்சுறுத்தலாகவே இருந்தது. தொடக்கம் முதலே துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வங்கதேச அணி ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை வங்கதேச வீரர் சாத் உத்தின் அடித்தார். 

இதையடுத்து, ஆட்டத்தின் 2-வது பாதியிலும் இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்று அதிர்ச்சியளிக்கவுள்ளது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதன்பிறகு, ஒரு வழியாக ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் இந்திய வீரர் அடில் கான் ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.

இதன்பிறகு, இரண்டு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கிலேயே சமனில் முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் தற்போது 2 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 1 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com