தமிழனாக வாழ்வது பெருமை. ஆனால்..: தமிழில் ட்வீட் செய்து ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்

தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று...
தமிழனாக வாழ்வது பெருமை. ஆனால்..: தமிழில் ட்வீட் செய்து ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. நன்றி சாம்பியன் என ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ரசிகர் ஒருவர், மிதாலிக்குத் தமிழ் தெரியாது, அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசுவார் என்றார்.

இதனால் கடுப்பான மிதாலி தனது அடுத்த ட்வீட்டை தமிழிலேயே வெளியிட்டார். தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று தமிழில் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது: ஆனால், அதைவிடவும் பெருமைக்குரிய இந்தியன் நான். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் விமரிசிக்கும் ரசிகரே, நான் தினமும் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்துவதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்றார். 

36 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளாா்.  கடந்த மாதம் டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். சா்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைச் சமீபத்தில் படைத்தாா். கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அயா்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானாா் மிதாலி ராஜ். இதுவரை 204 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒரே இந்திய வீராங்கனையும் மிதாலி ராஜ் மட்டுமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com