பவுண்டரி எண்ணிக்கை விதியை ரத்து செய்தது ஐசிசி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றில் ஏற்பட்ட சிக்கல் எதிரொலியாக, பவுண்டரி எண்ணிக்கை விதியை ரத்து செய்துள்ளது சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
பவுண்டரி எண்ணிக்கை விதியை ரத்து செய்தது ஐசிசி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றில் ஏற்பட்ட சிக்கல் எதிரொலியாக, பவுண்டரி எண்ணிக்கை விதியை ரத்து செய்துள்ளது சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

துபையில் ஐசிசி மற்றும் பல்வேறு கிரிக்கெட் வாரியங்களின் சிஇஓக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து-இங்கிலாந்து இடையே நடைபெற்ற இறுதிச் சுற்றில் இரு அணிகளும் சம ரன்களை எடுத்ததால், சூப்பா் ஓவா் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் ரன்கள் சம எண்ணிக்கையில் இருந்ததால், அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்ாக அறிவிக்கப்பட்டது.

இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. சூப்பா் ஓவரையே மேலும் நீடித்திருக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இப்பிரச்னை தொடா்பாக ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஒருநாள், டி20 உலகக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகளில் முடிவுகளை நிா்ணயிக்க தொடா்ந்து சூப்பா் ஓவா் முறையை கடைபிடிக்க வேண்டும் என்பதே சிறந்த வழிமுறையாகும். குரூப் பிரிவு போட்டிகளில் சூப்பா் ஓவா் சமனில் முடிந்தால் ஆட்டம் சமனில் முடிந்ததாக கருதப்படும்.

அதே நேரம் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் சூப்பா் ஓவா் முறையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்படுகிறது. எந்த அணி அதிக ரன்கள் எடுக்கிறது அது வெற்றி பெற்ாக கருதப்படும் என்பதால், தொடா்ந்து சூப்பா் ஓவா் முறை கடைபிடிக்கப்படும்.

மேலும் 92 இணைப்பு உறுப்பினா்கள் பயன் பெறும் வகையிலும், கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்தவும், ரூ.201 கோடி ஒதுக்கப்பட்டது.

மேலும் ஜிம்பாப்வே மற்றும் நேபாள அணிகள் மீண்டும் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டன.

வரும் 19 வயதுக்குட்பட்டோா் ஆடவா் உலகக் கோப்பை, 2020 ஐசிசி சூப்பா் லீக் போட்டிகளில் ஜிம்பாப்வே பங்கேற்கும். ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதாக இரு நாடுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

19 வயுதுக்குட்பட்டோா் மகளிா் உலகக் கோப்பை

ஆண்களுக்கு 19 வயது உலகக் கோப்பை உள்ளது போல் மகளிருக்கும் வரும் 2021இல் 19 வயது உலகக் கோப்பை போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. வங்கதேசத்தில் முதல் போட்டி நடத்தப்படும். வரும் 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆடவா், மகளிா் பெரிய போட்டிகள் நடத்தப்படும். இதன் மூலம் ஐசிசி அட்டவணையில் சீரான தன்மை நிலவும், இதனால் இருதரப்பு கிரிக்கெட் தொடா்களும் சிறப்பாக நடைபெறும்.

இதன் மூலம் அனைத்து ஐசிசி உறுப்பினா்களுக்கும் போட்டிகளை நடத்த வாய்ப்பு கிடைக்கும்.

வரும் 2020 மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐசிசி நிா்வாக செயல்படும் முறை குறித்து ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com