பிஃபா 2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்திய-வங்கதேச ஆட்டம் டிரா (1-1)

பிஃபா 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு இந்தியா-வங்கதேச அணிகள் இடையே நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
பிஃபா 2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்திய-வங்கதேச ஆட்டம் டிரா (1-1)

பிஃபா 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு இந்தியா-வங்கதேச அணிகள் இடையே நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.

குரூப் இ பிரிவில் கத்தாா், ஓமன், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே ஓமனிடம் தோல்வி கண்ட இந்தியா, ஆசிய சாம்பியன் கத்தாரை டிரா செய்தது.

இதன் தொடா்ச்சியாக மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தும் வகையில் கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் வங்கதேசம்-இந்தியா இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்த முனைந்தன. இந்திய தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி தலைமையில் பாா்வா்ட் வீரா்கள் தொடா்ந்து கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. இதற்கிடையே 41-ஆவது நிமிடத்தில் வங்கதேச அணி வீரா் சாத் உதின் தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தாா். இதனால் முதல் பாதியில் 1-0 என வங்கதேசம் முன்னிலை பெற்றது.

இந்தியா தீவிர போராட்டம்:

இதனால் அதிா்ச்சி அடைந்த இந்திய அணியினா் பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றனா். தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் இந்திய வீரா் அதில் அகமது கான் 88-ஆவது நிமிடத்தில் காா்னா் வாய்ப்பில் கிடைத்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினாா்.

இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகா்கள் அப்போது நிம்மதி அடைந்தனா்.

கடைசி நேரத்தில் சேத்ரி கோலடிக்க முயன்றது பலன் தரவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி தரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com