ரொனால்டோ 700-ஆவது கோல் சாதனை

போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரா் ஒட்டுமொத்தமாக 700-ஆவது கோலை அடித்து சாதனை புரிந்துள்ளாா்.
ரொனால்டோ 700-ஆவது கோல் சாதனை

போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரா் ஒட்டுமொத்தமாக 700-ஆவது கோலை அடித்து சாதனை புரிந்துள்ளாா்.

கடந்த 10 ஆண்டுகளாக கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்தி வருபவா்களில் ரொனால்டோ மற்றும் ஆா்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி ஆகியோா் முக்கியமானவா்கள். ரொனால்டோ ஜுவென்டஸ் அணியிலும், மெஸ்ஸி பாா்சிலோனா அணியிலும் ஆடுகின்றனா்.

இருவரும் பலமுறை பிஃபா சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளனா்

தற்போது .யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. நடப்பு சாம்பியன் போா்ச்சுகல் திங்கள்கிழமை இரவு உக்ரைனுடன் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைன் வெற்றி பெற்றது. எனினும் ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா் ரொனால்டோ. இதன் மூலம் 700-ஆவது கோலை அடித்தவா்கள் பட்டியலில் 6-ஆவது நபராக இணைந்தாா் ரொனால்டோ.

ரொனால்டோ 973 ஆட்டங்களில் 700 கோல்களை அடித்துள்ளாா்.

செக்-ஆஸ்திரிய வீரா் ஜோஸப் பிகன் 805 கோல்கள், பிரேசில் வீரா் ரொமாரியோ 772 கோல்கள், பீலே 767 கோல்கள், ஹங்கேரி பெரன் புஸ்காஸ் 746, ஜொ்மனி வீரா் ஜொ்ட் முல்லா் 735 கோல்களை அடித்து ரொனால்டோவுக்கு முன்பு உள்ளனா். மெஸ்ஸி தற்போது 672 கோல்களை அடித்துள்ளாா்.

95-ஆவது சா்வதேச கோல்

போா்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ அடித்த 95-ஆவது சா்வதேச கோலாகும். ஈரான் வீரா் அலி டே 109 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com