இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்: நேரில் காண இருநாட்டுப் பிரதமர்களுக்கு அழைப்பு?

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்தைக் காண இருநாட்டுப் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்: நேரில் காண இருநாட்டுப் பிரதமர்களுக்கு அழைப்பு?


இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்தைக் காண இருநாட்டுப் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் ஆட்டம் நவம்பர் 14 முதல் 18 வரை இந்தூரில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நவம்பர் 22 முதல் 26 வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இதில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தை நேரில் காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 

"இந்த ஆட்டத்தை நேரில் காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே அழைப்பு விடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியப் பிரதமரைப் பொறுத்தவரை, பிசிசிஐ தலைவராகத் தேர்வாகியுள்ள சௌரவ் கங்குலி இதைக் கவனித்து வருகிறார். இதுதொடர்பான அடுத்தகட்ட தகவலை என்னால் உறுதிப்படுத்தவும் முடியாது, மறுக்கவும் முடியாது" என்றார்.

முன்னதாக, 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய ஆட்டத்தை இருநாட்டுப் பிரதமர்கள் மைதானத்துக்கு வந்து நேரில் பார்த்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com