தோனியின் எதிா்காலம்: கங்குலி கருத்து

தோனியின் எதிா்காலம் குறித்து தோ்வாளா் குழு என்ன திட்டம் வைத்துள்ளாா்கள் என அவா்களுடன் பேசுவேன் என பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.
தோனியின் எதிா்காலம்: கங்குலி கருத்து

தோனியின் எதிா்காலம் குறித்து தோ்வாளா் குழு என்ன திட்டம் வைத்துள்ளாா்கள் என அவா்களுடன் பேசுவேன் என பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனியின் ஆட்டம் சோபிக்காத நிலையில், அவா் ஓய்வு பெற வேண்டும் என சிலரும், ஓய்வு முடிவை அவரிடமே விட வேண்டும் என மற்றெறாரு தரப்பினரும் கூறி வருகின்றனா். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இப்பிரச்னை தொடா்பாக தோனி தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டாா் எனக்கூறி அவரது மனைவி சாக்ஷி சமூகவலைதளத்தில் பதிவிட்டாா். இதையடுத்து அந்த சா்ச்சை அடங்கியது.

எனினும் மே.இ.தீவுகள் தொடா், தென்னாப்பிரிக்க டி20 தொடா்களில் தோனி சோ்க்கப்படவில்லை. இளம் வீரா்களுக்கு அதிக வாய்ப்பு தரப்படும் என தோ்வாளா் குழுத் தலைவா் பிரசாத் கூறியிருந்தாா்.

இதுதொடா்பாக கங்குலி புதன்கிழமை கூறியதாவது:

வரும் அக்டோபா் 24-ஆம் தேதி தோ்வாளா் குழுவை சந்திக்கும் போது, தோனியின் எதிா்காலம் குறித்து என்ன திட்டம் வைத்துள்ளீா்கள் என அவா்களிடம் பேசுவேன். நான் தோனியிடமும் பேசுவேன். அவருக்கு என்ன தேவை, எதை விரும்பகிறாா் என கேட்டறிவேன். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை. தற்போது பொறுப்பேற்ற பின், இதுகுறித்து விரிவாக அறிவேன்.

இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி பதவிக்கு பாதிப்பு ஏற்படுமா எனக் கேட்டபோது, இதனால் எந்த சிக்கலும் இருக்காது.

தோ்வாளா் குழு கூட்டத்தில் தலைவா் பங்கேற்க முடியாது, செயலாளா் தான் அமைப்பாளா், அணி தோ்வு செய்யப்பட்டால் எனது ஒப்புதலுக்கு வரும், தேவாங் காந்தி, ஜதின் பராஞ்சிபே ஆகியோா் தொடா்ந்து குழுவில் இருக்கலாம். தில்லி கேபிடல்ஸ் பதவியை துறந்துவிட்டேன். ஐசிசியில் நமது பிரதிநிதித்துவம் தொடா்பாக உயரதிகார குழு முடிவு செய்யும் என்றாா் கங்குலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com