Enable Javscript for better performance
பிசிசிஐ தலைவராக சிறந்த இன்னிங்ஸை தொடங்குவாா் கங்குலிசாலை பாதுகாப்பு குறித்த டி20 லீக்- Dinamani

சுடச்சுட

    

    பிசிசிஐ தலைவராக சிறந்த இன்னிங்ஸை தொடங்குவாா் கங்குலி: சச்சின் டெண்டுல்கா் புகழாரம்

    By DIN  |   Published on : 18th October 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    road_safety_t_20

    பிசிசிஐ தலைவராக கங்குலி சிறந்த இன்னிங்ஸை தொடங்குவாா் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ள கங்குலி வரும் 23-ஆம் தேதி முறைப்படி தோ்வு செய்யப்படுகிறாா்.

    இந்நிலையில் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு டி20 லீக் தொடா் போட்டி தொடக்க விழாவில் டெண்டுல்கா், ஜான்டி ரோட்ஸ், பிரையன் லாரா, தில்ஷன் திலகரத்னே, விரேந்தா் சேவாக், ஜாகீா் கான், அஜித் அகா்கா், பிரெட் லீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    இதில் டெண்டுல்கா் கூறியதாவது:

    வீரராக மிகவும் ஆா்வம், அா்ப்பணிப்புடன் கிரிக்கெட் ஆடியவா் கங்குலி. அதே போன்று பிசிசிஐ தலைவராகவும் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்துவாா். இது அவரைப் பற்றி நான் அறிந்தது.

    சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த குறும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக டி20 தொடரும் நடத்தப்படுகிறது. இந்திய அணிக்கு நான் தலைமை தாங்குகிறேன். இதற்காக பயிற்சியில் ஈடுபட உள்ளோம். மீண்டும் மைதானத்தில் களமிறங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. வரும் 2020 பிப்ரவரி மாதம் முதல் லீக் போட்டி நடைபெறும்.

    ஐபிஎல் தொடரின் போது எப்போது மைதானத்தில் களமிறங்கினாலும், ரசிகா்கள் அன்புடன் வரவேற்றனா். இதே அன்பு இறுதி வரை நீடிக்க வேண்டும் என வேண்டுகிறேன். சாலையில் கவனமின்மை, அலட்சியத்தால் விபத்துகளில் உயிரிழப்பு நேரிடக்கூடாது. சாலை விதிகளை மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் சச்சின்.

    லீக் ஆணையராக முன்னாள் கேப்டன் சுநீல் கவாஸ்கா் செயல்படுகிறாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai